செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (09:29 IST)

தமிழகத்தில் 37 சிறப்பு சிறைச்சாலைகள்: கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை!

தமிழகத்தில் சிறைக்கைதிகளிடையே கொரோனா பரவாமல் இருக்க புதிய கைதிகளுக்காக சிறப்பு சிறைச்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. சிறையில் சிறிய அளவிலான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், புதிதாக சிறைக்கு வருபவர்களால் தொற்று பரவிடக்கூடாது என்ற நோக்கில் 37 மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கைதிகளை மற்ற சிறைச்சாலைகளுக்கு அனுப்பிவிட்டு அவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.