மேலும் பல பகுதிகளில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கு தடை; மாவட்ட காவல்துறை அதிரடி!
சாத்தான்குளம் விவகாரத்தில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் பல்வேறும் மாவட்ட காவல்துறை ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸை தடை செய்துள்ளன.
சாத்தான்குளம் கொலைவழக்கு சம்பவத்தில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினருக்கும் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின. அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பிற்கு கட்டுப்பாடுகள் கொண்டு வர வேண்டும் என குரல்கள் எழுந்தன.
இதுகுறித்து நடவடிக்கை எடுத்த விழுப்புரம் எஸ்.பி ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவல்நிலையங்களுக்குள் நுழைய தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் ரோந்து பணிகள், வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளிலும் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் ஈடுபட தடை விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி சரக டிஐஜியும் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கு இத்தகைய தடைகளை விதித்துள்ளார். அதன்படி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் மேற்கண்ட பணிகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமூக பணிகளை தொடர ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கு எந்த தடையும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.