1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 ஜூன் 2019 (18:33 IST)

பப்ஜி இஸ்லாமை இழிவுபடுத்துகிறது – போலிஸில் புகார் அளித்த தமிழ்நாடு முஸ்லீம் லீக் !

பப்ஜி கேமில் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலம் இழிவுபடுத்தப்படுவதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் போலிஸில் புகார் அளித்துள்ளது.

பப்ஜி போன்ற ஆன்லைன் இணையதள விளையாட்டுகள் இப்போது இளைஞர்களை அதிகளவில் ஈர்த்து வருகின்றன. ஒரு கட்டத்தில் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் பப்ஜி விளையாட்டைத் தடை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு முஸ்லீம் லீக் அமைப்பு சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் ‘ இந்தியா அதிகளவில் இளைஞர்களைக் கொண்டுள்ள நாடு. இந்தியாவின் சக்தியே அவர்கள்தான்.  இந்தியா வல்லரசு ஆவதைத் தடுப்பதற்காக வெளிநாட்டு சக்திகள் ஆன்லைன் விளையாட்டு சக்திகள் மூலம் நாளைய சமுதாயத்தை முடக்க சதி செய்துள்ளன. மேலும் இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான காஃபாவை இழிவுபடுத்தும் விதமாக ஒரு இடத்தை உருவாக்கி இழிவுபடுத்தியுள்ளனர். ஆகவே பப்ஜி விளையாட்டை தடை செய்ய வேண்டும்’ எனக் கூறியுள்ளனர்.