வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (13:15 IST)

அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் – நெல்லையில் வெடித்தது கலவரம்

இன்று வீரன் அழகுமுத்துக்கோன் 309வது பிறந்த தினம் தமிழகமெங்கும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நெல்லையில் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவிப்பது தொடர்பாக அதிமுக- அமமுக இடையே மோதல் வெடித்துள்ளது.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளான இன்று சென்னை எழும்பூர் ரயில்நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்தார். ஆண்டுதோறும் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் தினத்தில் தென்மாவட்டங்களில் கலவரம் வெடிப்பது வழக்கம். இதனால் முன்கூட்டியே செயல்பட்ட தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவை பிறப்பித்தார்.

இந்நிலையில் திருநெல்வேலி பகுதியில் சிலைக்கு மாலை அணிவிப்பதில் அப்பகுதி அதிமுக- அமமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக வெடித்தது. கலவரத்தில் இரண்டு பேருக்கு தலையில் பலமாக அடிப்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது. இந்த சம்பவதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. வேறு ஏதேனும் கலவரங்கள் வெடிக்க வாய்ப்பிருப்பதால் போலீஸார் எக்கசக்கமாக குவிக்கப்பட்டுள்ளனர்.