பொருளதார வளர்ச்சியில் சிறந்த தமிழ்நாடு..! – நிதி ஆயோக் அறிக்கை!
மாநிலங்களில் பொருளாதாரம், கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
இந்திய மாநிலங்களின் கல்வி, கட்டமைப்பு, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளையும் கணக்கிடும் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு பல்வேறு வகையிலும் வளர்ச்சி குறியீடு உள்ள மாநிலங்களை தரவரிசைப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. சமூக முன்னேற்றம், கல்வி மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் தமிழகத்தின் வளர்ச்சி வலுவாக உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.