தென்னிந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய தமிழகம்! – ஆர்பிஐ அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் ரிசர்வ் வங்கியிடம் அதிகமாக கடன் வாங்கிய மாநிலங்களில் தென்னிந்தியாவிலேயே அதிகமான கடன் பெற்ற மாநிலமாக தமிழகம் இருப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மக்களுக்கான நலத்திட்டங்கள் அதிகமாக வழங்கப்பட்டு வரும் அதேசமயம், மாநில நிதியும், மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் நிதியும் குறைவாகவே உள்ளன. இதனால் இதர செலவினங்களுக்கு ரிசர்வ் வங்கியிடம் தமிழக அரசு கடன் பெற்று வருகிறது.
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசு, புயல், வெள்ள நிவாரண உதவிகள் என தொடர்ந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்காக நிதி தேவை இருந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடந்த 6 மாதத்தில் மட்டும் 50 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக தமிழ்கம் பெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சந்தையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை அடைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் வாங்கிய கடனுடன் ஒப்பிட்டால் இந்த ஆண்டின் கடன் தொகை 107% ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.