1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (15:23 IST)

3 அமைச்சர்களின் துறைகளில் முக்கிய மாற்றங்கள் – தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக அமைச்சரவையில் உள்ள 3 அமைச்சகங்களில் இடம்பெற்றுள்ள துறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகளும் செயல்பட்டு வரும் நிலையில் துறைகளின் அடிப்படையில் தனி அமைச்சகங்கள் அமைக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது அமைச்சகங்களில் இடம்பெற்றுள்ள துறைகள் வேறு அமைச்சகங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

தமிழக அரசின் அறிவிப்பின்படி, தொழில்துறை அமைச்சரிடம் இருந்த சர்க்கரை ஆலைகள் துறை உழவர் நலத்துறை அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் வசம் இருந்த விமான போக்குவரத்து துறை தற்போது தொழில்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுபோல சிறுபான்மை நலத்துறையிடம் இருந்த அயலக பணியாளர் கழகம் தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு மாற்றப்பட்டுள்ளது.