1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (10:34 IST)

திருட்டு போன்களின் சந்தையான தமிழ்நாடு

திருட்டு போன்களின் விற்பனை மையமாக தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்கள் இருந்து வருகிறது.


 

 
சமீபத்தில் பெங்களூரு காவல்துறையினர், திருட்டு போன சுமார் 400 மொபைல் போன்களை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து பறிமுதல் செய்தனர். 
 
திருட்டு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மக்களை ஏமாற்றி செல்ஃபோன்கள் திருடி வருகின்றனர் என்று விசாரணையில் தெரியவந்தது. பெங்களூருவில் திருடப்படும் மொபைல் ஃபோன் அங்கு உள்ள கடைக்காரர்களால் ஐஎம்இஐ நம்பர் அழிக்கப்பட்டு தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனை செய்யப்படுகின்றன. 
 
இதனையடுத்து பெங்களூருவில் உள்ள செல்ஃபோன் மெக்கானிக் மற்றும் கடைக்காரர் சங்கத்தை காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர். ஏனென்றால் திருடப்படும் மொபைல் ஃபோன்களின் ஐஎம்இஐ எண்களை இவர்கள் அழித்து தருகின்றனர். இது போன்று மறுபடி செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.