கமல்ஹாசன் முதலில் இதை செய்யட்டும்! தமிழிசை செளந்திரராஜன் காட்டம்

kamal tamilisai" width="600" />
sivalingam| Last Modified ஞாயிறு, 16 ஜூலை 2017 (23:13 IST)
நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாகவும், எதிர்த்தும் அரசியல் தலைவர்களும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர்.


 
 
கமல்ஹாசனை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும், அவர் ஒழுங்காக வரி செலுத்தினாரா? என்பதை சோதனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அமைச்சர்கள் மிரட்டி வரும் நிலையில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு ஆதரவாக இன்று அறிக்கைவிட்டார்.
 
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கமல் குறித்து கூறியப்போது, 'கமல்ஹாசன் முதலில் திரைத்துறையின் குறைகளை சரி செய்யும் வேலையை செய்தால் போதும், அரசியலை பின்பு பாக்கலாம்' என்று கூறினார். மேலும் கடந்த ஆண்டு துணிச்சலாக எந்த கருத்தையும் தெரிவிக்காத கமல்ஹாசன், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பேசுகின்றார் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :