திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 ஏப்ரல் 2023 (11:42 IST)

பாஜக குறித்து என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம்: கவர்னர் தமிழிசை செளந்திரராஜன்..!

பாரதிய ஜனதா கட்சி குறித்து என்னிடம் எந்த கேள்வியும் கேட்க வேண்டாம் என்றும் தற்போதைய பாரதிய ஜனதா கட்சி தலைவரிடம் கேளுங்கள் என்றும் பத்திரிகையாளர்களுக்கு புதுவை மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ’பாஜக தலைவர்கள் அதிமுக தலைவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்து கேட்கப்பட்டது 
 
இதற்கு பதில் கூறிய தமிழிசை சௌந்தரராஜன் நான் பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்தபோது அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களிடமும் மரியாதைவுடன் நடந்திருக்கின்றேன். அனைவருக்கும் கருத்து கூற உரிமை உண்டு, அதன் அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமி அவரது கருத்தை தெரிவித்துகிறார். 
 
பாரதிய ஜனதா கட்சி குறித்து தற்போதைய தலைவர்களிடம் கருத்துக் கேளுங்கள் என்னை தயவுசெய்து இதில் இழுத்து விடாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran