1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 6 மே 2023 (14:31 IST)

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநர் வேண்டுமா? துணைநிலை ஆளுநர் தமிழிசை

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஆளுநர் வேண்டுமா என தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழகம் தெலுங்கானா உள்பட ஒரு சில மாநிலங்களில் முதல்வர்களுக்கும் ஆளுநர்களுக்கும் ஏற்பட்டு வரும் சர்ச்சை காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
குறிப்பாக தமிழக ஆளுநர் ரவியை முதல்வர் உள்பட அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ’எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் ஏன் ஆளுநர் மாளிகைக்கு சென்று புகார் கொடுத்தார்கள் என்றும் எதிர் கட்சியாக இருக்கும் போது மட்டும் ஆளுநர் வேண்டுமா? ஆளுங்கட்சியாக இருந்தால் ஆளுநர் வேண்டாமா? என கேள்வி எழுப்பி உள்ளார்
 
Edited by Mahendran