1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 21 ஜூன் 2021 (07:26 IST)

தமிழக முதல்வருடன் தமிழிசை செளந்திரராஜன் சந்திப்பு!

தமிழக முதல்வருடன் தமிழிசை செளந்திரராஜன் சந்திப்பு!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முக ஸ்டாலின் மற்றும் தமிழிசை சவுந்தரராஜன் ஆகிய இருவரும் எதிரெதிர் கட்சிகளில் இருந்த நிலையில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு இருந்தனர் என்பது தெரிந்ததே 
 
ஆனால் தற்போது தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்களும் தெலுங்கானா மற்றும் புதிய ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் அவர்களும் பதவியில் உள்ள நிலையில் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்படுகிறது 
 
மேலும் தமிழகம் மற்றும் தெலுங்கானா தமிழகம் மற்றும் புதுவை மாநில உறவுகளை வளர்க்கும் வகையிலும் இந்த சந்திப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது