புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை நாளை பதவியேற்பு!
புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்தர்ராஜன் நாளையே பதவியேற்க உள்ளார்.
புதுவையில் முதல்வராக நாராயணசாமி பதவியேற்றதில் இருந்தே அவருக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் இடையே மோதல் போக்கே நிகழ்ந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் புதுவை கவர்னராக இருந்த கிரண்பேடி நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஏற்கனவே தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் புதுவை மாநில கவர்னராகவும் கூடுதலாக பொறுப்பு ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழிசை நாளையே அந்த பதவியை ஏற்க உள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.