திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 20 ஜூலை 2018 (09:03 IST)

காங்கிரஸ் கட்சியின் ஜீரோ செய்தி தொடர்பாளர் திமுக: தமிழிசை கண்டனம்

மக்களவையில் இன்று பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில் இந்த தீர்மானத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்துள்ள திமுகவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
காங்கிரஸ் கட்சியிய்ன் ஜீரோ செய்தி தொடர்பாளர் போல் திமுக செயல்பட்டு வருவதாகவும், மக்களவையில்  ஒரு எம்பி கூட இல்லாத திமுக எப்படி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு தர முடியும்?  என்று கேள்வி எழுப்பிய தமிழிசை, மக்களவையில் 16 எம்பிக்களை வைத்திருந்த காலத்தில் இலங்கை தமிழகர்களூக்காக ஒருமுறையாவது  திமுக எத்தனை நம்பிக்கையில்லா தீர்மானங்களை கொண்டு வந்ததா? என்றும் கேள்வி எழுப்பினார்.
 
மேலும் தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிப்பதற்காக அவருக்கு நன்றி கூறிக்கொள்வதாக தமிழிசை கூறினார். அதேபோல் நீட் தேர்வு விவகாரத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் செய்த தவறுக்கு தவறுக்கு மாணவர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றும், மொழிபெயர்ப்பாளர்களிடம் விசாரணை நடத்தி அவர்கள் மீது தவறு இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.