1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 2 மே 2022 (17:02 IST)

கோமா போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லலாம்: தமிழிசை செளந்திரராஜன் டுவிட்

Tamilisai
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க சில டிப்ஸ்களை புதுவை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 
 
கோடை வெயிலினால் ஏற்படும் உடல்நல பாதிப்பும்,ஆபத்தும்...
 
உடல் உஷ்ண தாக்கத்திற்கான அறிகுறிகள்.
 
1.அளவுக்கதிகமான வியர்வை, நாக்கு மற்றும் தோள் வறட்சி ஏற்படுதல்,
 
2.மனக்குழப்பம்,பேச்சுக்குழறுதல்,தலை சுற்றல்,மயக்கம், வலிப்பு நோய்,நினைவிழந்து கோமா போன்ற ஆபத்தான நிலைக்கு செல்லலாம்.
 
இதை தடுப்பது எப்படி?
 
1.மெல்லிய பருத்திநூல் மற்றும் கதர் ஆடைகள் அணிவது,
 
2.தண்ணீர் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 லிட்டர் அருந்துவது
 
3.அதிக வெயில் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்ப்பது, 
 
4.இணை நோய் உள்ளவர்கள், முதியவர்கள்,குழந்தைகள் வெயிலில் செல்வதை தவிர்ப்பது