Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அவர் எப்பவுமே இப்படிதான்... என்ன பண்றது? புலம்பிய தமிழிசை


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:21 IST)
சுப்ரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதற்கு, அவர் எப்போதாவது இப்படிப் பேசினால் பரவாயில்லை, எப்பவுமே இப்படித்தான் என்றால் என்ன செய்வது என்று தமிழிசை கூறியுள்ளார்.

 


மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

சசிகலா முதலமைச்சராக பதவியேற்பதுதான் முறை. திராவிடக் கட்சிகள் தமிழகத்திலிருந்து ஒழிக்கப்பட்டு பாரதிய ஜனதாவின் தேசியத் தலைமை தமிழகத்தில் கால் ஊன்றினால் மட்டுமே தமிழகத்தைக் காப்பாற்ற முடியும், என்றார்.

இதுகுறித்து பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதாவது:-

சுப்பிரமணியன் சுவாமி இப்படிப் பேசி இருப்பது வருத்தமளிக்கிறது. தமிழக பாஜக பன்னீர்செல்வம்தான் முதல்வராக மீண்டும் வரவேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. சசிகலாவுக்கு பதவி ஆசை ஏற்படாமல் இருந்திருந்தால், பன்னீர்செல்வமே முதல்வராக நீடித்திருந்திருப்பார். இப்படிப்பட்ட சுழல் உருவாகி இருக்காது.

சுப்ரமணியன் சுவாமி எப்போதாவது இப்படி பேசினால் பரவாயில்லை. எப்பவுமே இப்படித்தான் என்றால் என்ன செய்வது? என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :