Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

போட்டு உடைத்த ரஜினி : மறுப்பு தெரிவிக்கும் தமிழிசை


Murugan| Last Updated: திங்கள், 15 மே 2017 (14:22 IST)
ரஜினியை அரசியல் ஆதாயத்திற்காக பாஜக தலைவர்கள் சந்திக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
ரஜினிகாந்த் 10 வருடங்களுக்குப் பிறகு, இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய ரஜினிகாந்த் “ சில அரசியல் தலைவர்கள் என்னை அரசியல் ஆதாயத்திற்காக சந்தித்து பேசுகிறார்கள். அவர்களுக்கு நான் ஆதரவு கொடுப்பதில்லை” என கூறினார்.
 
சமீப காலமாக, பாஜக தலைவர்களே ரஜினியை அடிக்கடி சந்தித்து பேசுவதால், அவர்களைத்தான் ரஜினி கூறுகிறார் என செய்திகள் வெளியானது. 
 
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழிசை “ரஜினியை முன்னிறுத்தி தமிழகத்தில் பாஜக காலுன்று நினைக்கிறது என்கிற கருத்து தவறானது. ஊழல் இல்லாத நல்லாட்சி அமைய வேண்டும் என ரஜினி பேசியிருக்கிறார். பாஜகவின் கொள்கையும் அதுதான். எனவே, அவரின் கருத்தை பாஜக வரவேற்கிறது. ஆனால், தன்னை சில அரசியல்வாதிகள் அரசியல் லாபத்திற்காக வந்து சந்திக்கிறார்கள் எனக்கூறியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை பாஜக தலைவர்கள் சந்திப்பது மரியாதை நிமித்தமாக மட்டுமே. அரசியல் ஆதாயத்திற்காக அல்ல” என அவர் கூறினார். 


இதில் மேலும் படிக்கவும் :