செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 ஜூன் 2021 (18:15 IST)

அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட்: இறையன்பு ஐஏஎஸ்

தமிழகத்தின் அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோடு முறையை கையாள வேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்
 
இதுகுறித்து அவர் தனது சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து அரசு துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும் இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்பட்டதாக தமிழ் யூனிகோட் இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் இவனுக்கு ஒரு முறை பின்பற்றப்படும் என்று கூறப்பட்டு வருகிறது. தலைமை செயலாளர் இறையன்பு அவர்களின் இந்த சுற்றறிக்கைக்கு அரசுத்துறை வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றன