1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள போகும் தமிழக வீரர்கள், வீராங்கனை!

ஒலிம்பிக் போட்டி விரைவில் ஜப்பானில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்திலிருந்து கலந்துகொள்ள இருக்கும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யார் யார் என்ற தகவல் தற்போது தெரியவந்துள்ளது 
 
பவானி தேவி என்பவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகம் வீரர்களில் ஒருவர். பவானிதேவி வரும் வாள்சண்டை பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார் 
அதேபோல் டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் போட்டிகளில் சத்திய ஞானசேகரன் என்பவர் பங்கேற்க உள்ளார் 
 
டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டியில் சரத் கமல் என்பவர் பங்கு கொள்ள உள்ளார் 
 
மேலும் இளவேனில் வாலறிவன் என்பவர் துப்பாக்கி சுடுதல் 100 மீட்டர் ஏர் ரைபிள் மட்டும் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்
 
இவர்களில் எத்தனை பேர் ஒலிம்பிக்கில் தங்கம் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்று வருகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் 3 கோடியும், வெள்ளி வென்றால் இரண்டு கோடியும் வெண்கலம் என்றால் ஒரு கோடியும் பரிசு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.