1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 16 ஜூன் 2023 (08:44 IST)

தமிழ்நாட்டுக்கு 'கருணாநிதி நாடு' என்றும் பெயர் சூட்டுவார் ஸ்டாலின்: ஆர்.பி. உதயகுமார்

udhayakumar
தமிழ்நாட்டுக்கு கருணாநிதி நாடு என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் பெயர் சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 
 
எடப்பாடி பழனிச்சாமி 69 ஆவது பிறந்த நாளை ஒட்டி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் ’மதுரையில் நூலகத்துக்கு கருணாநிதியின் பெயரை வைக்கிறார், சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர், தற்போது கிண்டியில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனைக்கும் கருணாநிதி பெயர் இப்படியே போனால் தமிழ்நாடு, கருணாநிதி நாடு என்று மாற்றவும் வாய்ப்பு இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
 
கருணாநிதி பெயரை மட்டும் இன்றி மற்ற தலைவர்களின் பெயர்களையும் கட்டிடங்களுக்கு வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
Edited by Siva