1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (20:11 IST)

சென்னைக்கு மேலும் மழையா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

weatherman
சென்னையில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில் மேலும் இரண்டு நாட்கள் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார் 
 
வங்ககடலில் தோன்றியுள்ள அசானி புயல் இன்று இரவு ஆந்திர மாநில கடற்கரையில் கரையை கடக்க இருப்பதை அடுத்து தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் இன்னும் இரண்டு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார் 
 
அக்னி நட்சத்திரம் வெயில் காரணமாக சென்னை மக்கள் கடும் அவஸ்தையில் இருக்கும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேனின் இந்த தகவல் தற்போது பெரும் மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது 
 
சென்னை மக்கள் இன்னும் இரண்டு நாட்களுக்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையை அனுபவிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது