மே 14 வரை கோடை மழை: கொண்டாடுங்க மக்கா!!
வளிமண்டல சுழற்சி காரணமாக 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் மே 14 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, மதுரை, புதுக்கோட்டை, தென்காசி, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், குமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.