திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 மே 2020 (17:37 IST)

அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தும் வெயில், வெப்பம்!!

இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வட தமிழகத்தில் வெப்பநிலை அதிகரித்து உணரப்படும். 

 
அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த கத்திரி வெயில் வரும் 28-ம் தேதி நிறைவடைகிறது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் இனி வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல வெப்பமும் அதிகரித்து உணரப்பட்டது. 
 
இந்நிலையில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வடதமிழகத்தில் வெப்பநிலை 40-42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.