அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று அதிகாலை மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம், தருமபுரியில் மழை பெய்யக்கூடும். திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் இடியுடன் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.