திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 11 ஜூலை 2021 (12:37 IST)

எதிர்காலத்தில் தமிழ்நாடு பிரிக்கப்படலாம்: காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்

எதிர்காலத்தில் தமிழ்நாடு பிரிக்கப்படலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஜாதிய ரீதியாக பிரிக்க கூடாது என்றும் அரசியல் ரீதியாக பிரிக்கப் படக்கூடாது என்றும் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழ்நாட்டிலிருந்து கொங்குநாடு என பிரிக்க வேண்டுமென பாஜகவினர் முழக்கம் கொடுத்து வரும் நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி திருநாவுக்கரசர் அவர்கள் இது குறித்து கூறியதாவது: 
 
அரசியல் ரீதியாக தமிழ்நாடு பிரிக்கப் படக்கூடாது என்றும் ஆனால் அதே நேரத்தில் எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகம் ஆனால் நிர்வாக ரீதியாக தமிழ்நாடு பாதிக்கப்படலாம் என்றும், சாதி அடிப்படையிலோ அல்லது அரசியல் ரீதியாகவோ தமிழ்நாடு பிரிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். அவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.