திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 10 நவம்பர் 2023 (15:31 IST)

2024ஆம் ஆண்டின் பொது விடுமுறை நாட்கள்; தமிழக அரசு அறிவிப்பு..!

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அடுத்த ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை அறிவித்து வரும் நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்கள் குறித்து அறிவிப்பை சற்று முன் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 
 
2024 ஆம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.  2024 ஆம் ஆண்டின் பொது விடுமுறை தினம் குறித்த தமிழக அரசின் அறிவிப்பை தற்போது பார்ப்போம்
 
ஜனவரி1 ஆங்கில புத்தாண்டு
 ஜனவரி 15-ம் தேதி பொங்கல்
ஜனவரி 16-திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 உழவர் திருநாள்
ஜனவரி 25-தைப்பூசம்
ஜனவரி 26 -குடியரசு தினம் 
மார்ச் 29-புனித வெள்ளி
ஏப்ரல் 1 வங்கி ஆண்டு கணக்கு முடிவு
ஏப்ரல் 9-தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 11 - ரம்ஜான்
ஏப்ரல் 14-தமிழ் வருட பிறப்பு
ஏப்ரல் 21 மகாவீர் ஜெயந்தி
மே 1 மேதினம்
ஜூன் 16 பக்ரீத்
ஜூலை 17 மொகரம்
ஆகஸ்ட்15 சுதந்திர தினம்  
ஆகஸ்ட் 26  கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர் 7 விநாயக சதுர்த்தி
செப்டம்பர் 16 மீலாதுன் நபி
அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி
அக்டோபர் 11 ஆயுத பூஜை
அக்டோபர் 12 விஜய தசமி
அக்டோபர்31 தீபாவளி
டிசம்பர் 25 கிருஸ்துமஸ்
 
Edited by Siva