திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 12 அக்டோபர் 2022 (18:27 IST)

புத்தாண்டு, பொங்கல், தீபாவளி எல்லாமே ஞாயிறு தான்.. 2023 தமிழக அரசின் விடுமுறை நாட்கள்

2023
புத்தாண்டு, பொங்கல், தீபாவளி எல்லாமே ஞாயிறு தான்.. 2023 தமிழக அரசின் விடுமுறை நாட்கள்
2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விடுமுறை தினங்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் இந்த பட்டியலில் ஆங்கில புத்தாண்டு, பொங்கல், மற்றும் தீபாவளி உள்பட பல நாட்கள் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 
2023 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை நாட்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. மொத்தம் 24 நாட்கள் அடுத்த ஆண்டு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆங்கில புத்தாண்டு பொங்கல் மற்றும் தீபாவளி உள்பட 8 நாட்கள் சனி ஞாயிறு கிழமைகளில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆங்கில புத்தாண்டு, பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தினம், மொகரம், தீபாவளி ஆகிய நாட்கள் சனி ஞாயிறு கிழமைகளில் வருவதால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்
 
Edited by Siva