வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (01:56 IST)

தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பு நம்பக்கூடியதாக இல்லை: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தடாலடி

தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பு குறித்து சிலர் வெளியிட்ட தகவல்  நம்பக்கூடியதாக இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கருத்து  தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நீதி மன்ற உத்தரவிப்படி, மதுரையில் நிபந்தனை ஜாமினில் தங்கியுள்ளார்.
 

 
இந்த நிலையில், முதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில், கையெழுத்திட்ட வந்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பு சிலருடைய துாண்டுதலால் காரணாக  வெளி வந்துள்ளது. அந்த தகவல் நம்பக்கூடியதாக இல்லை. பலமுறை, கருத்துக் கணிப்புகளை மீறி காங்கிரஸ் கட்சி அதிக ஓட்டுகளைப் பெற்றுள்ளது என்பது வரலாறு.
 
தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நான், தலைவர் என்பதை விட தொண்டனோடு தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன்.
 
ஆம்புலன்ஸ் ஊழலில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. அதை அவர்கள் சட்டப்படி சந்திக்க வேண்டும். ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரம் தப்பிக்கவே முடியாது.
 
நான் டெல்லி சென்று போது, என்னை, அகில இந்தியத் தலைவர் சோனியா காந்தியும்,  ராகுல் காந்தியும் சந்திக்க மறுத்துவிட்டதாக வதந்தி கிளம்பியது. அவர்களை, நேரில் மட்டும் அல்ல. எப்போது வேண்டுமானாலும் போனிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.