திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (13:41 IST)

ஸ்ரீநகரில் சாலை விபத்து: தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் மரணம்!

ஸ்ரீநகரில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் எம்.என்.மணி என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிஆர்பிஎஃப் படையில் பணிபுரிந்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.என்.மணி என்பவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த இவர் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அதிமஞ்சரைப்பேட்டையை சேர்ந்தவர்.
 
தமிழக வீரர் எம்.என்.மணி உள்பட சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற பேருந்து மீது மற்றொரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில் நிலை தடுமாறி அருகில் இருந்த பெட்ரோல் பங்க்கிற்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளாகியது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. ஸ்ரீநகரில் ஹைடர்போரா என்ற இடத்தில் ஏற்பட்ட இந்த சாலை விபத்தில் 2 வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் 7 வீரர்கள் சிறு காயங்கள் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.