1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (01:19 IST)

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கொடநாடு பயணம்

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, இன்று மதிய நேரத்தில், கொடநாடு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.
 
கடந்த சில நாட்களாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் சட்ட மன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், இன்று சட்ட மன்ற உறுப்பினராக இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார்.
 
இதனையடுத்து, முதலமைச்சர் ஜெயலலிதா பகல் 11.50 மணிக்கு கொடநாடு செல்கிறார். கொடநாடு செல்லும் ஜெயலலிதா அங்கு சுமார் இரண்டு வார காலம் தங்கியிருந்து கட்சிப் பணிகளையும், அரசுப் பணிகளையும் கவனிப்பார் என்று கூறப்படுகிறது.