திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (13:24 IST)

தீபாவளிக்கு முன்பே கூடுகிறதா தமிழக சட்டப்பேரவை: பரபரப்பு தகவல்!

TN assembly
தமிழக சட்டசபை தீபாவளிக்கு முன்பே கூட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
தமிழக சட்டசபை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது
 
தீபாவளிக்கு முன்னதாக சட்டமன்ற கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யும் மசோதா, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரண அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அறிக்கை ஸ்மார்ட் கார்டு தொடர்பான அறிக்கை ஆகியவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன