1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழக சட்டசபை மகாபலிபுரத்திற்கு மாறுகிறதா?

TN assembly
தமிழக சட்டசபை மகாபலிபுரத்திற்கு மாற இருப்பதாகவும் அதற்காக 6 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு வாங்கி இருப்பதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
தற்போது தமிழக சட்டசபை இருக்குமிடம் நெருக்கமாக இருப்பதால் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஓமந்தூரார் கட்டிடம் சட்டசபைக்க்காதத்தான் கட்டப்பட்டது
 
ஆனால் ஜெயலலிதா ஆட்சியில் அது மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையை மகாபலிபுரத்தை மாற்றுவதற்காக 6 ஏக்கர் நிலத்தை வாங்கி அதற்கான பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் அங்கு புதிய சட்டபேரவை அமைக்க திமுக முயற்சி செய்து வருவதாகவும் பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் 
 
அதுமட்டுமின்றி மகாபலிபுரத்தில் திமுக அலுவலகம் திறப்பதற்காக இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் 6 அமைச்சர்களின் பினாமி பெயரில் மகாபலிபுரம் பகுதியில் 100 ஏக்கர் நிலம் திமுகவினர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்