1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 13 செப்டம்பர் 2021 (16:57 IST)

முடிந்தது சட்டப்பேரவை கூட்டம்: 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்!

தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று கூட்டம் நிறைவு பெற்றதாக சபாநாயகர் அப்பாவை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
 
தமிழக சட்டசபை ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கியது என்பதும் இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் மொத்தம் இருபத்தி மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த கூட்டத்தொடரில் 30க்கும் மேற்பட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதும் அதில் குறிப்பாக சிஏஏ சட்டத்துக்கு எதிரான மசோதா, வேளாண் சட்டத்திற்கு எதிரான மசோதா, நீட் தேர்வுக்கு எதிரான மசோதா ஆகியவை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அது மட்டுமின்றி பல்வேறு மக்கள் நலன் மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அரசியல் கட்சிகளின் வெளிநடப்பு காரசாரமான விவாதங்கள், மக்கள் நல திட்டங்கள் உள்பட பல அம்சங்கள் நிறைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது