தமிழ் தேர்வு எழுதினால்தான் காவலர் பணி! – சீருடை பணியாளர் தேர்வாணையம்!
தமிழக காவலர் பணித் தேர்வுகளில் தமிழ் தேர்வில் தேர்ச்சியடைவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தமிழகத்தில் காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தி பணி நியமனம் செய்து வருகிறது. சமீப காலமாக தமிழ் வழியில் பயின்றோருக்கு அரசு பணியில் முன்னுரிமை, போட்டித் தேர்வுகளில் தமிழ் தேர்வுக்கு முன்னுரிமை ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் காவலர் பணி தேர்விலும் தமிழ் மொழி தேர்வு சேர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மற்ற அனைத்து தாள்களிலும் தேர்ச்சியடைந்து தமிழ் தேர்வில் தேர்ச்சி அடையாவிட்டால் காவலராக முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேர்வில் குறைந்தபட்சம் 40 விழுக்காடு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றால்தான் மற்ற தாள்களின் தேர்ச்சி கணக்கில் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.