திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 15 டிசம்பர் 2018 (12:49 IST)

தாம்பரம் –கடற்கரை ரயில்கள் :அதிகாலை மற்றும் இரவில் ரத்து

பராமரிப்புப் பணிகள் நடைபெறும் காரணத்தால் இன்றும் நாளையும் தாம்பரம் –சென்னைக் கடற்கரை செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை 10 மற்றும்  11-ல் உள்ள நடை மேம்பாலம் விரிவாக்க பணிகள் டிசம்பர் 15 மற்றும் 16 ஆகியத் தேதிகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடைபெற இருக்கின்றன.

இது சம்மந்தமாக தென்னக ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் ’15-ம் தேதி தாம்பரம் - கடற்கரைக்கு இரவு 11.30 மணி மற்றும் கடற்கரை - தாம்பரத்துக்கு இரவு 11.05, 11.30, 11,59 ஆகிய நேரங்களில் செல்லும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும். செங்கல்பட்டு - கடற்கரைக்கு இரவு 10.15, 11.10 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில் தாம்பரம் வரை இயக்கப்படும்.’

‘16-ம் தேதி கடற்கரை - தாம்பரத்துக்கு அதிகாலை 4.15 மற்றும் தாம்பரம் - கடற்கரைக்கு அதிகாலை 4.00, 4.20, 4.40, 5.15 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படும். கடற்கரை - செங்கல்பட்டுக்கு அதிகாலை 3.55, 4.40, 5.00 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.’ என அறிவித்துள்ளனர்.