பூனை போல் சாதுவாக அமர்ந்திருக்கும் டி23 புலி! – வைரலாகும் வீடியோ!
நீலகிரியில் பிடிபட்ட டி23 புலி மைசூர் சரணாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீலகிரி மாவட்டம் மசினக்குடி பகுதியில் கடந்த ஒன்றரை மாதங்களாக சுற்றி திரிந்த டி23 புலி 4 மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்றது. இதனால் புலியை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் ட்ரோன் கேமரா, கும்கி யானைகளை பயன்படுத்தி புலியின் நடமாட்டத்தை காணித்து வந்தனர் வனத்துறையினர்.
இந்நிலையில் 21 நாள் போராட்டத்திற்கு பிறகு டி23 புலி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பிடிபட்ட டி23 புலியை வனத்துறையினர் மைசூர் வனவிலங்கு பூங்காவில் வைத்துள்ளனர். இந்நிலையில் டி23 புலியை பார்க்க பலரும் ஆவலாய் பூங்காவிற்கு வருவதாய் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பூங்காவிம் பரமசாதுவாக டி23 அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.