நான் அமைச்சரானால் ரூ.40க்கு பெட்ரோல்: டி.ஆர்.பாலு சபதம்
கடந்த சில மாதங்களுக்கு முன் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கிய நிலையில் தற்போது ஓரளவுக்கு விலை குறைந்து ரூ.75 என்ற அளவில் உள்ளது. இந்த நிலையில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மக்களவை திமுக வேட்பாளராக போட்டியிடும் டி.ஆர்.பாலு, நான் பெட்ரோல் அமைச்சரான மறுநாளே பெட்ரோல் விலையை ரூ.40க்கு குறைத்து காட்டுகிறேன், இது சவால் என்று கூறியுள்ளார்.
தான் ஏற்கனவே 1996-ஆம் ஆண்டு பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்ததாகவும், அந்த அனுபவத்தில் தன்னிடம் பெட்ரோலிய துறை அமைச்சர் பொறுப்பை மீண்டும் கொடுத்தால் தன்னால் பெட்ரோல் விலையை குறைக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் நான் அமைச்சராகி பெட்ரோல் விலையை குறைத்துவிட்டால் அதன் பின் பாஜகவினர் யாரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றும் இந்த சவாலை மோடி உள்பட பாஜகவினர் ஏற்று கொள்ள தயாரா? என்றும் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல் விலை உயர்வு என்பது மக்களின் பிரதான பிரச்சனையாக இருப்பதால் அதன் விலையை சுமார் 50% குறைப்பதாக வாக்கு கொடுத்த டி.ஆர்.பாலு, இந்த தேர்தலில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவே கருதப்படுகிறது.