வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 19 செப்டம்பர் 2022 (17:34 IST)

தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது- முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர்

vijay bashkar
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பரவுகிறது எனவும் இதை அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிக்கவில்லை என முன்னாள் அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரொனா தொற்றுப் பரவல் ஓரளவு குறைந்திருந்த நிலையில், சென்னையில் தொற்று அதிகரித்து வருவதுடன், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். .

இந்த நிலையில் இன்று புதுக்கோட்டை திலகர் திடல் அருகேயுள்ள கல்யாண மண்டத்தில் நடந்த கண்ணாதாசன் இலக்கிய சாரலின் முப்பெரும் விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாள்ர்களைச் சந்தித்த விஜயபாஸ்கர்,சென்னை எழும்பூரில் குழழந்தைகள்  மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு படுக்கைகள் இல்லை என்றும், ப்ளூ பன்றிக் காய்ச்சல் (H1N1) தமிழகத்தில் பரவி வரும் நிலையில், திமுக அரசு இதை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.