சுவாதி கொலையாளி ராம்குமார் சென்னை கொண்டு வரப்படுகிறார்
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரை காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்து வருகின்றனர்.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியை கொலை செய்த குற்றவாளி ராம்குமாரை நீண்ட போராட்டத்துக்கு பின்னர் காவல் துறையினர் கைது செய்தனர்.
ராம்குமார் கைது செய்யப்படும் வேளையில் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராம்குமாருக்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பின்னர் ராம்குமார் நெல்லை மாஜிஸ்திரேட் ராமதாஸ் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இதையடுத்து ராம்குமாரை காவல் துறையினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வருகின்றனர். பாளையங்கோட்டை மருத்துவமனையில் இருந்து இருந்து சென்னையை நோக்கி ஆம்புலன்ஸ் புறப்பட்டது. அதிகாலை 3 மணி அளவில் வந்து சேரும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ராம்குமார் நாளை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.