வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (22:45 IST)

பாஜகவிலிருந்து சூர்யா சிவா தற்காலிக நீக்கம்- அண்ணாமலை அறிக்கை

பாஜகவில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்திற்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 
பாஜகவில் நிலவும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக, சமீபத்தில்,  பாஜக நிர்வாகி டெய்சிக்கும்,  திருச்சி எம்பி சிவாவின்( திமுக) மகன் சூர்யா சிவாவுக்கும் அவருக்கும் இடையே போனில் வாக்கு வாதம் எழுந்த  நிலையில், பாஜகவின் பெண் நிர்வாகியை சூர்யா சிவா மிரட்டியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  அவர் பாஜக நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதித்து அண்ணாமலை உத்தரவு பிறப்பித்ததுடன்

இதுகுறித்த விசாரனை நடத்தப்படு நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக அண்ணாமலை கூறியிருந்தார்.

இன்று,  பாஜகவில் இருந்து சூர்யா சிவா 6 மாதத்திற்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  கட்சியின் பெயருக்கு அவப்பேரிய  ன்விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ள சூர்ய சிவா, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலத்திற்கு நீக்கப்படுகிறார் என்றும். கட்சியில் ஒரு தொண்டனாக கட்சி வளர்ச்சிக்குப் பணியாற்றலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சூர்யா சிவா மீது எனக்கு நம்பிக்கை வந்தால் அவருக்குப் பொறுப்பு தேடி வரும் என்றும்  தெரிவித்துள்ளார்.