வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 7 மே 2021 (10:31 IST)

கொரோனா காலத்தில் நீங்கள் வந்திருப்பது நம்பிக்கையளிக்கிறது! – ஸ்டாலினுக்கு சூர்யா வாழ்த்து!

தமிழகத்தின் புதிய முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றிருப்பது நம்பிக்கையளிப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் இன்று ஆளுனர் முன்பாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல், திரை பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ள நடிகர் சூர்யா “முடித்தே தீர வேண்டிய பல காரியங்கள் வரிசைகட்டி நிற்கும் நிலையில் மக்களின் முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சுவாசிப்பதற்கு மூச்சு காற்று கூட இல்லாமல் மக்கள் திண்டாடும் இந்த நிலைமையில் நீங்கள் ஆட்சி பொறுப்பிற்கு வந்துள்ளது நம்பிக்கையை அளிக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை மீட்க ஒருமித்த குரலாய் உங்கள் குரல் ஒலிக்கட்டும்” என கூறியுள்ளார்.