1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (07:32 IST)

காவல்துறையினர்களுக்கு வேன் வழங்கிய சூர்யா: எதற்கு தெரியுமா?

surya van
காவல்துறையினர்களுக்கு வேன் வழங்கிய சூர்யா: எதற்கு தெரியுமா?
சென்னை காவல் துறையினருக்கு நடிகர் சூர்யா வேன் வழங்கியதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
சென்னை உள்பட பல நகரங்களில் பிளாட்பார்ம் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் வீடற்ற மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சென்னை காவல்துறையின் காவல் கரங்களுக்கு வேன் ஒன்றை நடிகர் சூர்யா வழங்கியுள்ளார் 
 
பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களுக்கு தேவையான பொருட்கள் கொண்டு செல்ல இந்த வேன் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யா ஏற்கனவே பல சமூக சேவைகளை செய்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சேவையாக காவல்துறையின் காவல் கரங்களுக்கு வேன் வழங்கியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது