வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (10:54 IST)

சசிகலாவின் முதல்வர் கனவை உடைத்த தீர்ப்பு

முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், சசிகலா தலைமையில் ஒரு அணியும் அதிமுகவில் உருவாகி தமிழக அரசியல் களத்தை மிகவும் பரபரப்பாக வைத்துள்ளது. முதல்வ பதவி அடைந்தே தீருவது என்ற முனைப்பில் சசிலலா தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதனல் அதிமுக எம்.எல்.ஏ.க்களை கூவாத்தூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.


 

இந்த நிலையில் தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அடுத்து சசிகலாவின் முதல்வர் கனவு சிதைந்தது என்றே கூறலாம். தண்டனை காலம் 4 ஆண்டுகள் என்பதால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சசிகலாவின் முதல்வர் கனவு தவிடுபொடியானது.

இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கார்டன் வட்டாரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.