செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார்? 2வது முறையாக கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்..!
செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிய நிலையில், இன்று மீண்டும் கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, 471 நாள் சிறையில் இருந்த பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். இந்த நிலையில், ஜாமீனில் வெளியான உடனே அவர் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், சென்னையை சேர்ந்த வித்யா குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார்.
அமைச்சர் பதவியில் இல்லை என கூறி, ஜாமீன் பெற்றவர் விடுதலையான அடுத்த நாளே அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதனால், அவரது வழக்கின் விசாரணை பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், எனவே அவரது ஜாமீன் மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்த நிலையில், ஜாமீன் பெற்ற மறுநாளே அமைச்சராகி இருப்பது வழக்கில் தொடர்புள்ள சாட்சிகளுக்கு அழுத்தம் உண்டாக்காதா? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மீண்டும் செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக தொடர்கிறார் என்பது குறித்து உரிய பதிலை 18ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Siva