திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 ஜூன் 2021 (11:22 IST)

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு உடனடி உள்ளாட்சி தேர்தல்! – உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நிர்வாக பகிர்வு வசதிக்காக மாவட்டங்கள் பல பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்நிலையில் நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுனர் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று இதுகுறித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15க்குள் புதிதாக பிரிக்கப்பட்டு உருவான 9 மாவட்டங்களிலும் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சி தேர்தல் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.