வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (20:53 IST)

வரும் ஞாயிறு அன்று ரேசன் கடைகள் செயல்படும்: அதிரடி அறிவிப்பு!

வரும் ஞாயிறு அன்று தமிழகத்தில் ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது
 
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் பொது வினியோக திட்டத்தின்கீழ் ஜனவரி 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்கள் பெறுவதற்காக நியாயவிலை கடைகளுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது
 
இதற்கு பதிலாக பிப்ரவரி 26-ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது
 
 இதனை அடுத்து இந்த வாரம் ஞாயிறு அன்று ரேஷன் கடைகள் உண்டு என்பதும் ரேஷன் அட்டைதாரர்கள் தேவையான பொருட்களை வாங்கி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது