ஐபிஎல்-லை வைத்து வருமானத்தை ஏற்றிக் கொண்ட சன் டிவி
சன் டிவியின் இந்த ஆண்டிற்கான வருமானம் ஐபிஎல் மூலமாக அதிக லாபத்தை கண்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், சன் டிவியின் வருமானம் 10 சதவீதம் உயர்ந்துள்ளதாம். இக்காலகட்டத்தில் அந்த நிறுவனத்திற்கு ரூ.760.83 கோடி வருவாய் கிடைத்துள்ளது. சப்ஸ்கிரைப் மூலமாக கிடைத்த வருவாய் 22 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், கேபிள் டிவி மூலமான வருமானம் 37 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் அணியின் உரிமையாளர் என்ற வகையில் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஐபிஎல் மூலம் கிடைத்த வருவாய் ஏப்ரல்-ஜூன் வரையிலான காலாண்டில் ரூ.144.04 கோடி எனவும், இது 49.19 சதவீத உயர்வு எனவும் கூறப்படுகிறது.
ஏனெனில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தி்ல் இந்த வருமானம் 96.55 கோடியாக இருந்தது. ஐபிஎல்லுக்கான செலவு இக்காலாண்டில் ரூ.175.84 கோடியாக இருந்தது. இதுவும் கடந்த ஆண்டைவிட 14.8 சதவீதம் அதிகம். செலவு கூட்டப்பட்ட அதே நேரத்தில் வருவாயும் கூடியுள்ளது.
சன்டிவி இந்திய அளவில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ள சேனலாகும். இதற்கு முக்கிய காரணம், அதன் நெடுந்தொடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.