1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 7 பிப்ரவரி 2017 (16:09 IST)

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு; டெல்லி விரைகிறார் மு.க.ஸ்டாலின்: சசிகலா முதல்வராக கூடாது!

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு; டெல்லி விரைகிறார் மு.க.ஸ்டாலின்: சசிகலா முதல்வராக கூடாது!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததையடுத்து தமிழக அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. அடுத்தடுத்த பல அதிரடிகள் நடைபெற்று வருகிறது. கடைசியாக ஜெயலலிதாவின் தோழி சசிகலா முதல்வராகும் சூழலில் தமிழகம் பரபரத்துக்கொண்டிருக்கிறது.


 
 
தமிழகம் முழுவதும் இவரது முதல்வர் பதவிக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரது மத்தியிலும் சசிகலாவுக்கு எதிர்ப்பே உள்ளது. இந்நிலையில் சசிகலா மீதான் சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது.
 
இதனையடுத்து உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. சசிகலா முதல்வராக திட்டமிட்டபடி பதவியேற்பாரா இல்லையா என்ற பரபரப்பு நிலவியே வந்தது. பின்னர் அவரது பதவியேற்பு ஏற்பாடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
 
இந்நிலையில் முதல்வராக இருந்த பன்னீர்செல்வமும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். இதனால் தமிழக அரசியல் நிலவரம் சற்று பதற்றமாகவே உள்ளது. இதனால் தமிழக எதிர்க்கட்சி தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசியல் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடமும், குடியரசு தலைவரிடமும் முறையிட டெல்லி விரைகிறார்.
 
அதிமுகவில் உள்ள சில அதிருப்திகளை பயன்படுத்தி திமுக ஆட்சியை கைப்பற்றவும் இந்த சந்திப்பின் போது வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் வருகின்றன. இதனால் ஸ்டாலினின் இந்த டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகிறார்.