செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 15 அக்டோபர் 2024 (17:01 IST)

மாநகரப் பேருந்து தகரம் பெயர்ந்து தொங்கிய சம்பவம்.. சம்பந்தப்பட்ட பணியாளர்கள் சஸ்பெண்ட்

சென்னையில் மாநகர பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென தகரம் பெயர்ந்ததை அடுத்து உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், மாநகர பேருந்து தகரம் தொங்கிய சம்பவத்தில் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சென்னை திருவொற்றியூர் அருகே மாநகர பேருந்து பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்பக்க தகரம் பெயர்ந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்த நிலையில், சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. 
 
ஊடகங்களில் வெளியான வீடியோவை பகிர்ந்த மாநகர பேருந்து கழகம் தனது சமூக வலைதளத்தில் இந்த தகவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran