1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 11 ஜூலை 2019 (20:11 IST)

தாயார் கண்முன் மாணவியை ' பெல்டால்' தாக்கிய கும்பல்!

கோவை குனியமுத்தூர் அண்ணா காலனியில் வசிப்பவர் கல்லூரி மாணவி (20). இவர் தனது ஆண்நண்பர்கள் 2 பேருடன் இரு சக்கரவாகனத்தில் சென்றுளார். ஆத்துப்பாலம் மரக்கடை அருகே அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் கல்லூரி மாணவியை வாகனத்தில் இருந்து இறக்கி, அவரது வீட்டுக்கு போகும்படி மிரட்டியதாகத் தெரிகிறது.
அதனால் கோபம் அடைந்த மாணவியின் இரு ஆண் நண்பர்கள் , அந்த கும்பலிடம் கேள்வி கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
 
பின்னர், அந்த கும்பல் மாணவியின் விட்டுக்குச் சென்று, மாணவியின்  தாயார் கண்முன்னே நீ இவனை காதலிக்கிறாயா என்று கேட்டு, பெல்டால் அடித்துள்ளார். மேலும் அந்த 2 ஆண் நண்பர்களையும் அடித்து உதைத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். 
 
இந்த சம்பவம் குறித்து கல்லூரி மாணவி, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் கரும்புக்கடையைச் சேர்ந்த சபியுல்லா, குனியமுத்தூரை சேர்ந்த முகமது இப்ராஹீம் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. கல்லூரி மாணவியை வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.